முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிட்னியில் சிறுவனால் ஏற்பட்ட மதக்கலவரம்

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2024      உலகம்
Jail 2024-05-01

Source: provided

சிட்னி : சிட்னி தேவாலயத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட சிறுவன் மீதான வழக்கு ஜூலை 26ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15ஆம் தேதி, சிட்னியில் 16 வயது சிறுவன் ஒருவன், தனது வீட்டிலிருந்து 90 நிமிடங்கள் பயணம் செய்து, சிட்னியிலுள்ள கிறிஸ்து தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்தில் நடைபெற்ற பிரசங்கத்தின்போது, மார் மரி இம்மானுவேல் என்ற பேராயரை கொலை செய்ய முயற்சித்துள்ளான். மேலும் ரெவ். ஐசக் ராயல் என்ற பாதிரியாரையும் கத்தியால் குத்தியுள்ளான். அதுமட்டுமன்றி, தடுக்க வந்த தனது தந்தை ஐசக் ரோயலையும் கத்தியால் குத்தியுள்ளான். இதனைத் தொடர்ந்து, அச்சிறுவன் கைது செய்யப்பட்டான். பேராயரும் பாதிரியாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குணமடைந்தனர்.

தேவாலயத்திற்கு வெளியே கலவரம் செய்த குற்றங்களுக்காக 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விடியோவில் பதிவாகியிருந்த மற்றவர்கள் தேடப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்தக் கலவரத்தில் 51 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தும், மற்றும் 104 காவல்துறை வாகனங்களும் சேதமடைந்திருந்தன. தேவாலயத்திற்குள் நடந்த தாக்குதலின்போது, அந்த சிறுவனும் காயமடைந்துள்ளான். காயமடைந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தப்போது, மருத்துவமனையிலும் சிறுவன் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டுள்ளான்.

இந்த சம்பவம் குறித்த விசாரணையில், தாக்கப்பட்ட பேராயர் இம்மானுவேல், பொது சொற்பொழிவுகளில் இஸ்லாம் மற்றும் முஹம்மது நபியை விமர்சித்ததால், அதிருப்தியடைந்த சிறுவன் இவ்வாறு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்றும் தெரிவிக்கப்பட்டது. சிறுவனின் மொபைல் போனில் 52,000 புகைப்படங்களையும் 7,500 விடியோக்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் சிறுவனின் தொடர்பில் இருப்பதாகக் கூறி, 14 முதல் 17 வயதுக்குள்பட்ட ஆறு சிறுவர்களைக் கைது செய்துள்ளனர். நேற்று (ஜூன் 14) நடைபெற்ற குழந்தைகள் நீதிமன்ற விசாரணையில், ஆதாரங்களை பகுப்பாய்வு செய்வதற்கு குறைந்தது 6 வாரங்கள் தேவைப்படும் என்று வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டதால், இந்த வழக்கு ஜூலை 26ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 16 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து