முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து உலக சாதனை

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2024      விளையாட்டு
England 2024-05-14

Source: provided

நியூயார்க் : டி20 உலகக் கோப்பை போட்டியில் ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் 19 பந்துகளில் போட்டியை முடித்து இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்துள்ளது.

புதிய சாதனை....

டி20 உலகக் கோப்பையின் 28-வது போட்டியில் ஓமன் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் விளையாடிய ஓமன் அணி 13.2 ஓவரில் 47 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் ஆடில் ரஷித் 4, மார்க் வுட் ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 19 பந்துகளில் 50/2 ரன்கள் எடுத்து போட்டியை முடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. சால்ட் 12 ரன்கள், கேப்டன் ஜாஸ் பட்லர் 24 ரன்கள்*, வில் ஜாக்ஸ் 5, ஜானி பெயர்ஸ்டோ 8* ரன்கள் எடுத்தார்கள்.

ரன் ரேட் உயர்வு...

இதன் மூலம் குரூப் பி புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணிக்கு ரன் ரேட் +3.081 ஆக மாறியுள்ளது. ஆனால் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற ஸ்காட்லாந்து அணி தோற்க வேண்டும், அடுத்த போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற வேண்டும்.இங்கிலாந்தின் சூப்பர் 8 கனவு ஸ்காட்லாந்துவிடம் இருக்கிறது. ஒருவேளை ஸ்காட்லாந்து வெற்றி பெற்றால் இங்கிலாந்து உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறும். ஸ்காட்லாந்து ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக பந்துகள் மீதம் வைத்து வெற்றி:

1) 101 பந்துகள் - இங்கிலாந்து 2024.

2) 90 பந்துகள் - இலங்கை 2014.

3) 86 பந்துகள் - ஆஸ்திரேலிய 2024.

4) 82 பந்துகள் - ஆஸ்திரேலியா 2021.

5) 81 பந்துகள் - இந்தியா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து