Idhayam Matrimony

டி-20 உலகக்கோப்பை தொடர்: லீக் சுற்றோடு வெளியேறியது பாக்., நியூசிலாந்து, இலங்கை

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      விளையாட்டு
Pak-1 2024-05-15

Source: provided

நியூயார்க் : டி-20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றோடு 3 முக்கிய அணிகளான பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகள் வெளியேறியுள்ளது அந்த அணிகளின் ரசிகர்களை அதிச்சியடைய செய்துள்ளது. 

3 புதிய அணிகள்...

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணிகளை தவிர மற்ற அணிகள் மிகப்பெரிய அளவில் அனுபவம் இல்லாத அணிகள். நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற அணிகளுக்கு ஓரளவு அனுபவம் உள்ளது. கனடா, அமெரிக்கா, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நேபாளம் பொன்ற அணிகள் தற்போதுதான் உலகக் கோப்பை தொடரில் விளையாடுகின்றன.

கத்துக்குட்டி அணிகள்...

முன்னணி அணிகளிடம் இந்த கத்துக்குட்டி அணிகள் என்ன பாடுபடப்போகிறதோ என விமர்சகர்கள் தெரிவித்தனர். ஆனால் மிகப்பெரிய அணிகளுக்கு இந்த அணிகள் அதிர்ச்சி அளித்துள்ளது. அத்துடன் முக்கியமான அணிகள் வெளியாக காரணமாக அமைந்தன. "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகள் இடம் பிடித்திருந்தன. இரண்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எளிதாக முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானை அமெரிக்கா சூப்பர் ஓவரில் வீழ்த்தியது. இதனால் பாகிஸ்தான் சூப்பர் 8 வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது. இதே பிரிவில் சற்று கூடுதல் அனுபவம் வாய்ந்த அயர்லாந்து அணியை கனடா வீழ்த்தியது.

ஆஸி., முன்னேற்றம்...

குரூப் "பி" பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ஸ்காட்லாந்திடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால் இங்கிலாந்து வெளியேறும் நிலை ஏற்படும். நமீபியாவுக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டாலும் இங்கிலாந்து வெளியேறிவிடும்.

ஆப்கான் - மே.இ.தீவுகள்...

குரூப் "சி"-யில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் ஆப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அதை நிரூபிக்கும் வகையில் நியூசிலாந்தை வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் நியூசிலாந்தை வீழ்த்தியதால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

தென் ஆப்பிரிக்கா...

குரூப் "டி"-யில் தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன. தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், இலங்கை அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு எதிராக இலங்கை தோல்வியை சந்தித்தது. இதனால் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. வங்காளதேசம் கடைசி போட்டியில் நேபாளத்தை வீழ்த்தியதால் எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நேபாளத்திற்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

முதல் சுற்றோடு...

அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தோற்றதனாலும், ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் நியூசிலாந்து தோல்வியடைந்ததாலும், தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு எதிராக இலங்கை அணி தோல்வியடைந்ததாலும் பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகள் முதல் சுற்றோடு உலக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து