முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      விளையாட்டு
ICC 2023 07 29

Source: provided

நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாள அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் இதற்கு முன் பல அணிகள் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளன.

திரில் வெற்றி...

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பதிவு செய்தது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் கிங்ஸ்டவுனில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது.

நேபாளம் தோல்வி...

116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாளம் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், வெற்றிக்காக கடைசி வரைப் போராடிய நேபாளம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.  

ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி:

1) தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்துக்கு எதிராக, 2009.

2) நியூசிலாந்து - பாகிஸ்தானுக்கு எதிராக, 2010.

3) இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2012.

4) இந்தியா - வங்கதேசத்துக்கு எதிராக, 2016.

5) ஜிம்பாப்வே - பாகிஸ்தானுக்கு எதிராக, 2022.

6) தென்னாப்பிரிக்கா - நேபாளத்துக்கு எதிராக, 2024.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து