முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மஹாராஜா விமர்சனம்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      சினிமா
Maharaja-Review 2024-06-17

Source: provided

சலூன் கடை நடத்தி வரும் விஜய்சேதுபதி, தனது மகளுடன் சென்னையின் புறநகர் பகுதியில் வசித்து வருகிறார். அவரது மகள் விளையாட்டு முகாமுக்காக வெளியூர் சென்றிருக்கும் நிலையில், தனது வீட்டில் இருக்கும் லட்சுமி காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் விஜய்சேதுபதி, முகமூடி அணிந்த 3 பேர் தன்னை தாக்கி விட்டு லட்சுமியை திருடிச்சென்று விட்டதாக சொல்கிறார்.

திருடப்பட்ட லட்சுமி யார்? என்பதை தெரிந்துக்கொண்டு கோபமடையும் ஒட்டுமொத்த காவல் நிலையமும், விஜய்சேதுபதியை கொல்லாத குறையாக விரட்டியடிக்கிறது. ஆனாலும், விடாபிடியாக லட்சுமியை கண்டுபிடித்து கொடுக்குமாறு தொல்லை கொடுக்கும் விஜய்சேதுபதி, தனது லட்சுமியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.7 லட்சம் கொடுப்பதாக சொல்கிறார். இப்படி ஒரு சாதாரண விசயத்துக்கு இவ்வளவு பணமா என்று ஆச்சரியப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி, விஜய்சேதுபதியின் லட்சுமியை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதே சமயம், லட்சுமிக்காக காவல் நிலையத்தை விட்டு நகராத விஜய்சேதுபதியின் அடுத்தடுத்த செயல்கள், அவர் லட்சுமிகாக காவல் நிலையத்திற்கு வரவில்லை, வேறு எதற்காகவோ வந்திருக்கிறார் என்பதை புரிய வைத்து விடுகிறது. அது என்ன? என்பதை பலவிதமான திருப்பங்களுடன் சொல்வதே ‘மஹாராஜா’

மகள் மீது வெறித்தனமான பாசம் வைத்திருக்கும் தந்தையாக மஹாராஜா என்ற கதாபாத்திரத்தில் இறுக்கமாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, தனது உடல் மொழி மூலமாகவே ஒட்டு மொத்த உணர்வுகளையும் வெளிப்படுத்தி கதாபாத்திரத்தை தாங்கி பிடித்திருக்கிறார். சிரிப்பு, அழுகை, கோபம் ஆகிய உணர்வுகளை உடல் மூலமாக அல்லாமல் கண்கள் மூலமாக வெளிப்படுத்தி சிறந்த நடிகராக ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கும் விஜய்சேதுபதி, தனது 50-வது படத்தில் முத்திரை பதித்துள்ளார் காமெடி வேடங்களில் சிரிக்க வைத்துக்கொண்டிருந்த சிங்கம் புலி, வேறு ஒரு முகத்தை காட்டி மிரட்டியிருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘மஹாராஜா’ மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து