முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்குறிச்சி சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி: குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்

புதன்கிழமை, 19 ஜூன் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, சமூகத்தைப் பாழ்படுத்தும் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியும், வேதனையையும் வெளிப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதவில் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை இடைக்கால பணிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கை தீர விசாரிக்கவும். தக்க மேல்நடவடிக்கைக்காகவும், உடனடியாக சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், கள்ளாச்சாரய உயிரிழப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து