முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலாவதியான மெத்தனால் விஷ சாராயத்தில் கலந்து விற்றது அம்பலம் : சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தகவல்

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2024      தமிழகம்
CBCID

Source: provided

சென்னை : ஆந்திராவில் செயல்படாத ரசாயன நிறுவனங்களில் இருந்து காலாவதியான மெத்தனாலை புதுச்சேரி வழியாக தமிழகம் கொண்டு வரப்பட்டு, சாராயத்தில் கலந்து விற்றது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கள்ளக்குறிச்சியில்  விஷ சாராயம் விற்றதாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, கோவிந்தராஜ் சகோதரர் தாமோதரன், சின்னதுரை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சி.பி.சி.ஐ.டி.யின் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சின்னதுரையிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் உள்ள செயல்படாத ரசாயன நிறுவனங்களில் இருந்து காலாவதியான மெத்தனாலை, மாதேஷ் என்பவர் வாங்கி வந்துள்ளார். காலாவதியான மெத்தனாலை, நல்ல சரக்கு எனக்கூறி சின்னதுரைக்கு விற்றுள்ளார்.

இவை ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வழியாக பல்வேறு சோதனைச் சாவடிகளை கடந்து விற்பனைக்கு தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த காலாவதியான மெத்தனாலை சாராயத்தில் கலந்து சின்னதுரை விற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து