முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் குரானை அவமதித்த நபருக்கு பொதுவெளியில் தூக்கு

சனிக்கிழமை, 22 ஜூன் 2024      உலகம்
Cort 2023 07-15

Source: provided

பெஷாவர் : பாகிஸ்தானில் முஸ்லிம்களின் புனித நுாலான குரானை அவமதித்த சுற்றுலா பயணி கைதான நிலையில், போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் அவரை சுட்டுக் கொன்றதுடன், பொதுவெளியில் அவரை துாக்கிலிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சியால்கோட்டைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் நகருக்கு கடந்த 20-ம் தேதி சுற்றுலா சென்றார். அங்கு அவர், முஸ்லிம்களின் புனித நுாலான குரானை அவமதித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, முகமது இஸ்மாயிலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, அங்குள்ள மசூதியில், ஒலிபெருக்கி வாயிலாக இச்சம்பவம் குறித்து நடந்த விபரம் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, முகமது இஸ்மாயிலை தங்களிடம் ஒப்படைக்குமாறு முழக்கமிட்டனர். போலீசார் எச்சரிக்கை விடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து செல்லாததால், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், எட்டு பேர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்தவர்கள் போலீஸ் நிலையத்தை சூறையாடியதுடன், போலீஸ் வாகனங்களையும் தீக்கிரையாக்கினர். இதனால், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் என கருதி, போலீசார் ஓட்டம் பிடித்தனர்.  அதன்பின் சிறையில் அடைக்கப்பட்ட முகமது இஸ்மாயிலை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதுடன், அவரது உடலை வெளியே இழுத்துச் சென்று பொதுவெளியில் துாக்கிலிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியதை அடுத்து, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து