முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ரூ.1000 கோடி நிதியில் பள்ளிகள் மேம்படுத்தப்படும்: சட்டசபையில் அமைச்சர் தகவல்

சனிக்கிழமை, 22 ஜூன் 2024      தமிழகம்
Anbil 2

சென்னை, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டசபையில் தெரிவித்துள்ளார். மேலும், ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பள்ளி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின் போது ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி.சண்முகையா ஒட்டப்பிடாரத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டிடம் கட்ட அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டிடம் கட்ட ஊரக வளர்ச்சி துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்யப்படும். ரூ.7500 கோடியில் 16 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ரூ. 2,487 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், பள்ளி சுற்றுச்சுவர், ஆய்வகங்கள் உள்பட 3603 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 3,601 வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பள்ளி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து