Idhayam Matrimony

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: இந்திய வீரர் சுமித் தகுதி

சனிக்கிழமை, 22 ஜூன் 2024      விளையாட்டு
Sumit-Nagal 2024-01-16

Source: provided

பாரீஸ் : இந்தியாவின் டென்னிஸ் வீரரான சுமித் நாகல், அதிகாரப்பூர்வமாக பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மகத்தான தருணம்...

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "நான் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளேன் என்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஒலிம்பிக்ஸ் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருப்பதால் இது எனக்கு ஒரு மகத்தான தருணம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

2-வது முறையாக... 

சுமித் நாகல் ஏற்கனவே 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடியுள்ளார். தற்போது 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளார். ரோகன் போபண்ணா, என் ஸ்ரீராம் பாலாஜி ஆண்டுகள் இரட்டையர் பிரிவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். போபண்ணா தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளார். அவர் தனது ஜோடியை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

37-வது இடத்தில்... 

இந்த மாத தொடக்கத்தில் சுமித் நாகல் ஹெய்ல்பிரோன் சேலஞ்சர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் முதல் 80 இடத்திற்குள் நுழைந்தார். இது தகுதி பெற முக்கிய காரணமாக அமைந்தது. ஆஸ்திரேலிய ஓபனில் முதன்மை சுற்று போட்டிக்கு தகுதி பெற்றார். 37-வது இடத்தில் இருந்த அலெக்சாண்டர் பப்லிக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து