முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் மறுதேர்வை 750 பேர் எழுதவில்லை: என்.டி.ஏ.

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      இந்தியா
Neet 2023-04-20

Source: provided

டெல்லி : 1,563 மாணவ-மாணவிகளுக்கு நேற்று நீட் மறுதேர்வு நடத்தப்பட்ட நிலையில், 750 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. இதனிடையே, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நீட் தேர்வில் 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

6 தேர்வு மையங்களில் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட குறைவான நேரமே ஒதுக்கப்பட்டதாக கூறி 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு வினாத்தாள் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. அதேவேளை, 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதை ரத்து செய்தது. மேலும், 1,563 மாணவ-மாணவிகளுக்கும் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவ-மாணவிகளுக்கும் நேற்று நீட் மறுதேர்வு நடைபெற்றது. சத்தீஷ்கார், குஜராத், அரியானா, மேகாலயா, சண்டிகர் ஆகிய பகுதிகளில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மறுதேர்வு நேற்று நடைபெற்றது. ஆனால், நேற்று நடைபெற்ற நீட் மறுதேர்வில் 48 சதவிகித மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை. 1,563 பேரில் 813 பேர் (52 சதவிகிதம்) மட்டுமே நேற்று நீட் மறுதேர்வு எழுதினர். எஞ்சிய 750 பேர் (48 சதவிகிதம்) நீட் மறுதேர்வை எழுதவில்லை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து