முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக காம்பீரை நியமித்தது பி.சி.சி.ஐ

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2024      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை : இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இதை அதிகாரப்பூர்வமாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

பதவிக்காலம் நிறைவு... 

2024 டி20 உலகக் கோப்பையை வென்ற உற்சாகத்தோடு, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் இந்திய தொடக்க வீரர்கள் கவுதம் காம்பீர் மற்றும் டபிள்யூ.வி.ராமன் ஆகியோர் கடந்த மாதம் பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவால் (சிஏசி) நேர்காணல் செய்யப்பட்டனர்.

பிசிசிஐ முன்னுரிமை... 

இதனைத் தொடர்ந்து கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ முன்னுரிமை அளிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், காம்பீர் சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணிக்காக தனது பிரியாவிடையை முடித்தார். இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2024 பதிப்பில் கொல்கத்தாவின் மூன்றாவது பட்டத்தை வென்றார். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெய் ஷா வாழ்த்து...

தலைமை பயிற்சியாளராக காம்பீர் இந்திய முகாமிற்கு வருவதை உறுதிப்படுத்திய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இரண்டு முறை உலகக் கோப்பை வென்றவருக்கு தனது எக்ஸ் இல் ஒரு சிறப்பு குறிப்பை எழுதியுள்ளார். "இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த காம்பீர் பொருத்தமான நபர் என்று தான் நம்புவதாக பி.சி.சி செயலாளர் வலியுறுத்தினார். "இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நவீன கால கிரிக்கெட் வேகமாக வளர்ந்துள்ளது. மேலும் கவுதம் இந்த மாறிவரும் சூழலை அருகில் இருந்து பார்த்துள்ளார்" என்று ஷா கூறினார்.

நான் நம்புகிறேன்...

தனது வாழ்க்கை முழுவதும் பல்வேறு பாத்திரங்களில் சிறந்து விளங்கிய கவுதம் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பொருத்தமான நபர் என்று நான் நம்புகிறேன். #TeamIndia குறித்த அவரது தெளிவான பார்வை, அவரது பரந்த அனுபவத்துடன் இணைந்து, இந்த உற்சாகமான மற்றும் மிகவும் விரும்பப்படும் பயிற்சியாளர் பாத்திரத்தை ஏற்க அவரை சரியாக நிலைநிறுத்துகிறது. இந்த புதிய பயணத்தைத் தொடங்கும்போது பிசிசிஐ அவருக்கு முழு ஆதரவளிக்கிறது" என்று பிசிசிஐ செயலாளர் மேலும் கூறினார்.

வி.வி.எஸ்.லட்சுமணன்.... 

முன்னதாக, இந்த மாதம் இலங்கைக்கு எதிரான வெள்ளை பந்து தொடரில் இருந்து இந்தியாவுக்கு புதிய தலைமை பயிற்சியாளர் இருப்பார் என்று பிசிசிஐ செயலாளர் ஷா உறுதிப்படுத்தினார். பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர் நியமனங்கள் விரைவில் நடைபெறும். சி.ஏ.சி இரண்டு பெயர்களை நேர்காணல் செய்து பட்டியலிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். முன்னதாக, ஜிம்பாப்வே தொடருக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன் பயிற்சியாளராக அனுப்பப்பட்டு உள்ளார். என்றாலும் தலைமைப் பயிற்சியாளர் பதவி நியமனத்தில் தாமதம் ஆவது ஏன் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த சூழலில் தற்போது கவுதம் காம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரூ.12 கோடி சம்பளம்...

கவுதம் காம்பீர் புதிய தலைமைப் பயிற்சியாளராகப் பதவியேற்க ரூ.12 கோடிக்கும் அதிகமாக சம்பளம் கேட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருந்ததது. அதனால்தான் புதிய பயிற்சியாளரை நியமிப்பதில் காலதாமதம் ஆனதாக சொல்லப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து