Idhayam Matrimony

ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம்: தருமபுரியில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

புதன்கிழமை, 10 ஜூலை 2024      தமிழகம்
Stalin 2021 11 29

தருமபுரி, தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்   இன்று 11-ம் தேதி ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர்  மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை அறிவித்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஆண்டு டிசம்பர்  18-ம் தேதி தொடங்கி  வைத்தார். 

அதன் மூலம் மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. நகரப் பகுதிகளில் இந்தத் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பினையடுத்து, அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். 

இந்த  திட்டத்தின் மூலம்  தமிழகம்  முழுவதும் உள்ள 12,500 ஊராட்சிகளில்,  2500 முகாம்கள் மூலம் 15 அரசு  துறைகளின் 44 சேவைகளுக்காக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது. 

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்திட தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்   இன்று 11-ம் தேதி ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர்  மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

இதற்காக  முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் மாவட்டம், ஓமலூர் விமான நிலையத்திற்கு 10 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 

பின்னர் அவர் ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழா, மனுக்கள் பெறுதல் மற்றும் துறை சார்ந்த அரங்குகளை பார்வையிடுகிறார். இதை தொடர்ந்து  20 புதிய நகர பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். 

பின்னர் அவர் விழா மேடை வந்தடைகிறார்.  இதனை அடுத்து கலெக்டர்  சாந்தி வரவேற்புரையாற்றுகிறார். காலை 11 மணிக்கு முதல்வர், அமைச்சர்களுக்கு கலெக்டர் சாந்தி  நினைவு பரிசுகளை வழங்குகிறார். விழா அரங்கில் திட்டப்பணிகளின் குறும்படம் திரையிடப்படுகிறது.  

தொடர்ந்து 11.10 மணிக்கு முடிவுற்ற திட்ட பணிகளை முதல்வர் திறந்து வைக்கிறார். இதையடுத்து  மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்த குறும்படமும் திரையிடப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின்  11.20 மணிக்கு  பேரூரை ஆற்றுகிறார். 

இதை தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் முதல்வர் வழங்குகிறார்.  முதல்வரின்  வருகையையொட்டி சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து