முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். ஆலோசனை : 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பணியாற்ற அறிவுறுத்தல்

புதன்கிழமை, 10 ஜூலை 2024      தமிழகம்
EPS 2024-07-10

Source: provided

சென்னை : 2024 பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்வாகிகளிடம் 2026 சட்டமன்றத்தேர்தலுக்கு தீவிரமாக பணியாற்றுமாறு அறிவுறுத்தினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பணிக்குழு பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தேர்தல் தோல்விக்கு காரணம் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக நிர்வாகிகள் அப்போது முறையிட்டதாக தெரிகிறது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பலமான கூட்டணியை அமைக்க வேண்டும் என நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

2026 சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்கும் வாய்ப்பு இல்லை எனவும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார். கூட்டணி அமைப்பதை தலைமை பார்த்துக் கொள்ளும். தேர்தல் வெற்றிக்கு பணியாற்றுங்கள். எங்கெல்லாம் பிரச்சினை இருக்கிறதோ அங்கெல்லாம் சரி செய்யுங்கள். நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; 2026 சட்டமன்றத்தேர்தலுக்கு தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து