முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பானி இல்ல திருமண விழா: அமிதாப் பச்சன் காலில் விழுந்து ஆசி பெற்ற நடிகர் ரஜினிகாந்த்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2024      சினிமா
Amitab-Rajini 2023-10-25

Source: provided

மும்பை : அம்பானி இல்ல திருமண விழாவில் அமிதாப் பச்சன் காலில் விழுந்து ஆசி பெற்ற ரஜினிகாந்த் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய மனைவி நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி. இந்த தம்பதியின் மகனான ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இடையேயான திருமணம் கடந்த 3 தினங்களுக்கு முன் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. எனினும், திருமண நிகழ்ச்சி 3 நாட்களாக கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த திருமண நிகழ்ச்சி கொண்டாட்டங்கள் இன்று வரை மும்பையில் நடைபெறுகின்றன. இதனால், மும்பை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதில் உள்ளூர் திரை பிரபலம் முதல் உலக பிரபலம் வரை பலரும் பங்கேற்று வருகின்றனர். பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் சர்வதேச அளவிலான முக்கிய பிரமுகர்களும் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதில், சுப ஆசீர்வாத் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஷாருக் கான், கவுரி கான், சல்மான் கான், ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்திய திரையுலகில் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களாக அறியப்படும் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்களுடைய குடும்பத்தினருடன் இந்நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியின்போது, அமிதாப் பச்சனை நோக்கி வந்த நடிகர் ரஜினிகாந்த், மரியாதைக்காக அவருடைய காலை தொட்டு வணங்கும் நோக்கத்துடன் சென்றார். எனினும், காலில் விழுவதற்கு முன் அவரை தடுத்து நிறுத்திய அமிதாப் பச்சன், அவரை அணைத்து கொண்டார். இதுபற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதற்கு முன், அமிதாப் பச்சனின் காலில் விழுந்து நடிகர் ஷாருக் கான் ஆசி பெற்றார். இந்த வீடியோவும் வைரலாக பரவி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து