எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை, மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக அஜித்பவாரின் கட்சியை சேர்ந்த 4 முக்கிய தலைவர்கள் சரத்பவார் கட்சிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.
மகாராஷ்டிராவின் பழம்பெரும் கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இன்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. முன்னதாக சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு ஆதரவு அளித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஆனார்.
சரத் பவார் அணி - அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் பிரிந்திருக்கும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா காங்கிரசின் இன்டியா கூட்டணியை ஒருங்கிணைத்த மஹா விகாஸ் அகாதி கூட்டணி மொத்தம் உள்ள 48 இடங்களில் 30 இடங்களை கைப்பற்றியது.
அஜித் -பவார் தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, பாஜகவின் என்டிஏ கூட்டணியை ஒருங்கிணைத்த மஹாயுதி கூட்டணி 17 இடங்களை மட்டுமே கைபற்றி பின்தங்கியது. இதன் விளைவாக ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை நடந்த சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்குப்பின் பாஜகவுடன் உள்ள அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என்று பேச்சு அடிபட்டது.
சரத் பவாரும், எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களின் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் வருபவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மாறாக எங்கள் கட்சியை வலுப்படுத்த விரும்புபவர்களாகவும் கட்சியின் கண்ணியத்தை குலைக்காதவர்களாகவும் இருந்தால் மட்டுமே அவர்களை ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் நடந்த மேலவைத் தேர்தலில் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்காமல் இருக்க ரிஸார்டுகளில் பாதுகாக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. இந்த நிலையில் பாஜக கூட்டணி தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் அணியிலிருந்து பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த 4 முக்கிய தலைவர்கள் விலகி உள்ளனர். பிம்ப்ரி சின்ச்வாட் பிரிவின் தலைவரான அஜித் கவாஹனே, மாணவர் தலைவர் யாஷ் சானே மற்றும் ராகுல் போஸ்லே, பங்கஜ் பாலேகர் அஜித் பவாரிடமிருந்து பிரிந்துள்ள நிலையில் சரத் பவாரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் முக்கியத் தலைவர்களின் இந்த கட்சித் தாவல் அம்மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இவர்களைத் தொடர்ந்து விரைவில் பலர் சரத் பவாரிடமே திரும்பி வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |