எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை, உள்ளூர் விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய விவகாரத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கரின் தாயார் மனோரமாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர் என்ற இளம்பெண் யு.பி.எஸ்.சி., தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது இடத்தை பிடித்தார். பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், புனே உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். அரசால் வழங்கப்படாத வசதிகளை இவர் அத்துமீறி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தன் சொகுசு காரில் அரசு பெயர் பலகை மற்றும் சிவப்பு - நீல சுழல் விளக்கு பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. விதிமீறலில் ஈடுபட்டதை அடுத்து பூஜா, வாஷிம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
ஐ.ஏ.எஸ்.பணியில் சேர்ந்த போது, உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை முறைகேடாக சமர்ப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் கமிஷனை சமீபத்தில் அமைத்தது.
அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழவே, பூஜா கேத்கரின் பயிற்சியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இந்நிலையில், அடுத்த சர்ச்சையில் பூஜா சிக்கியுள்ளார். மகராஷ்டிராவில் உள்ள பல்கோன் கிராமத்தின் ஊர் தலைவராக பூஜாவின் தாய் மனோரமா உள்ளார்.
அவரும், அவரது கணவரும் நிலப்பிரச்னையில் உள்ளூர் விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து மனோரமா தலைமறைவானார். அவர்களைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மகராஷ்டிரா போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மஹாத் என்ற இடத்தில் உள்ள ஓட்டலில் மனோரமாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை திலீப் கேத்கர் இன்னும் தலைமறைவாக உள்ளார். திலீப் கேத்கர் மகராஷ்டிரா அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் பணியாற்றிய போது, ஊழல் புகாரில் 2018 மற்றும் 2020 ஆண்டுகளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
சாம்சனுக்கு பயிற்சியாளர் ஆதரவு
13 Sep 2025சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
13 Sep 2025சிங்காநல்லூர் : கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர்.