முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரோஷியாவில் முதியோர் இல்லத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி : கைதான முன்னாள் ராணுவ வீரரிடம் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2024      உலகம்
Kuroatia 2024 07 23

Source: provided

தாருவார் : குரோஷியாவில் உள்ள முதியோர் இல்லத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய முன்னாள் ராணுவ வீரரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

குரோஷியா நாட்டின் தாருவார் நகரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு துப்பாக்கியுடன் நுழைந்த நபர் சரமாரியாக சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 

உடனே அந்த நபர் தப்பி ஓடி விட்டார். போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார். துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். 

அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் அவரது தாய் அந்த முதியோர் இல்லத்தில் 10 ஆண்டுகளாக வசித்து வந்தார் என்பதும் தெரியவந்தது. அந்த நபர் தனது தாயையும் சுட்டு கொன்றுள்ளார். தாக்குதலுக்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

அந்நாட்டு பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென் கோவிச் கூறும் போது, முதியோர் இல்லத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது ஒரு கொடூரமான செயல். இந்த குற்றத்தை நாங்கள் கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து