Idhayam Matrimony

ஐ.சி.சி. தரவரிசை: டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள்

புதன்கிழமை, 31 ஜூலை 2024      விளையாட்டு
ICC 2023 08 04

Source: provided

துபாய் : ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர.

ஜோ ரூட் முதலிடம்...

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கேப்டனும் நட்சத்திர வீரருமான ஜோ ரூட் 143 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,027 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 32 சதங்கள், 5 இரட்டை சதங்கள், 63 அரை சதங்கள் அடங்கும். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என அபார வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் ஜோ ரூட் சிறப்பாக விளையாடினார். இதன் மூலம் ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் ஜோ ரூட் முதலிடம் பிடித்துள்ளார்.

ரோகித் - ஜெய்ஸ்வால்...

இதற்கு முன்பு 2015 ஆகஸ்ட் மாதத்தில் ஜோ ரூட் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். முதலிடத்தில் இருந்த கேன் வில்லியம்சன் 2ஆம் இடமும் 3,4,5ஆம் இடங்களில் முறையே பாபர் அசாம், டேரில் மிட்செல், ஸ்டீவ் ஸ்மித் இருக்கிறார்கள். டாப் 10இல் 3 இந்திய பேட்டர்கள் இடம் பிடித்துள்ளார்கள். நட்சத்திர வீரர்களான ரோகித் 6ஆவது இடமும் ஜெய்ஸ்வால் 8ஆவது இடமும் விராட் கோலி 10ஆவது இடமும் பிடித்துள்ளார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 9 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 9 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 11 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 11 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 9 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து