முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு போட்டித் தேர்வுகள் மூலம் ரூ. 3,500 கோடி வருவாய் ஈட்டிய தேசிய தேர்வு முகமை

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2024      இந்தியா
Exam (2)

புது டெல்லி, தேசிய தேர்வு முகமை அமைப்பு இதுவரை நடத்திய தேர்வுகளிலிருந்து கட்டணம் மூலமாக ரூ.3,513 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 

 மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, பல்கலைக் கழக நுழைவுத்தேர்வான கியூட், பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளைத் தேசிய தேர்வு முகமை நடந்தி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க. அரசால் உருவாக்கப்பட்ட இந்த தேசிய தேர்வு முகமை அமைப்பு இதுவரை நடத்திய தேர்வுகளிலிருந்து கட்டணம் மூலமாக ரூ.3,513 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 

கடந்த புதன்கிழமை பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி விவேக் எழுப்பிய கேள்விக்கு  மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் பதிலளித்து பேசும் போது இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

ஈட்டிய தொகையில் 87.2 சதவீதம் தேர்வுகளை நடத்துவதற்காக செலவிடப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கியூட் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளுக்குப் பிறகு தேசிய தேர்வு முகமையின் வருமானம் 78 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-22 ஆண்டில் தேசிய தேர்வு முகமை ரூ. 490 கோடி ஈட்டிய நிலையில் 2022-23 ஆண்டு காலத்தில் ரூ.873 கோடி ஈட்டியுள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து