முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுநிலை நீட் வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவல்கள் தவறானவை : மத்திய அரசு விளக்கம்

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : முதுநிலை நீட் தேர்வுகள் டெலிகிராம் செயலி மூலம் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளத்தில் வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான எம்.டி, எம்.எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு நீட் தேர்வு வரும் 11-ஆம் தேதி நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், நீட் முதுநிலை தேர்வு வினாத்தாள் விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளமான டெலிகிராமில் தகவல் பரவியது. ஏற்கனவே இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் விற்பனைக்கு இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது..

இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் மத்திய அரசு வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது. வினாத்தாள் கசிவு என்று சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. இன்னும் வினாத்தாள் தயாரிக்கப்படவில்லை. வினாத்தாள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரப்பியவர்கள் மீது தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியத்தால் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து