எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சச்சினை முந்தி ஜோ ரூட் உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அதற்கு இங்கிலாந்து ஒவ்வொரு வருடமும் 10 முதல் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதில் ஜோ ரூட் 800 - 1000 ரன்கள் அடித்தால் சச்சினை முந்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் பாண்டிங் இது குறித்து பேசியது பின்வருமாறு., "33 வயதாகும் அவர் இன்னும் 4000 ரன்கள் பின்தங்கியுள்ளார். ஒரு வருடத்தில் இங்கிலாந்து 10 - 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் ரூட் 800 - 1000 ரன்கள் அடித்தால் 3 - 4 வருடத்திலேயே அங்கே செல்ல முடியும்.
அதற்கு 37 வயதாகலாம். அத்துடன் தற்போதுள்ள பார்ம் அப்படியே தொடர்ந்தால் அதற்கான சாத்தியம் உள்ளது. கடந்த சில வருடங்களாக ஜோ ரூட் தொடர்ந்து முன்னேற்றத்தை சந்தித்து வருகிறார். பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் 30 வயதின் ஆரம்பத்தில் உச்சத்தை தொடுவார்கள் என்று சொல்வார்கள். ஆரம்பக் காலங்களில் அரை சதத்தை அடித்த ரூட் அதை சதமாக அடிப்பதற்கு தடுமாறினார். இருப்பினும் சமீப காலங்களில் பெரும்பாலான அரை சதங்களை அவர் பெரிய சாதமாக மாற்றுகிறார். அதுவே அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது" என்று கூறினார்.
இந்தியா வெல்லும்: ரவி சாஸ்திரி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைபயிற்சியாளரான ரவி சாஸ்திரி, ஐசிசி இணையதளத்தில் கூறியிருப்பதாவது: இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா,முகமது ஷமி ஆகியோர் உடற்தகுதியுடன் உள்ளனர். இவர்களுடன் முகமது சிராஜும் இருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போன்றோரும் பெஞ்ச் வலிமையும் சிறப்பாக உள்ளது. இந்திய அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் என்றே கருதுகிறேன்.
இதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. ஏனெனில்பந்து வீச்சாளர்கள் உடற்தகுதியுடன் இருக்கிறார்கள். இந்திய அணியால் சிறப்பாக பேட் செய்யமுடிந்தால் ஆஸ்திரேலிய அணியைமீண்டும் ஒரு முறை தோற்கடிக்கலாம். கடந்த இரண்டு சுற்றுப்பயணங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை இரண்டு முறை தோற்கடித்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் பார்டர்-கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியா வெல்லவில்லை. இதன் காரணமாகவே கடந்த ஐந்து முதல் எட்டு ஆண்டுகளாக இந்த இரு அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இவ்வாறு ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து முன்னணி வீரர்கள் விலகுவது வாடிக்கையாகி உள்ளது. ஏற்கனவே வில்லியம்சன், டிரெண்ட் பவுல்ட், லாக்கி பெர்குசன் போன்ற முன்னணி வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து விலகி சாதாரண வீரராக விளையாட உள்ளதாக அறிவித்தனர். அந்த வரிசையில் தற்போது பின் ஆலன் மற்றும் டெவான் கான்வே மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி சாதாரண வீரர்களாக விளையாட உள்ளதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக தமது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கான்வே தெரிவித்துள்ளார். அதே சமயம் தாம் விரும்பும் தொடர்களில் தொடர்ந்து நியூசிலாந்துக்காக விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "முதலில் இந்த செயல்பாடுக்கு அனுமதியளித்த நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது நான் எடுத்த இலகுவான முடிவல்ல. ஆனால் இந்த நேரத்தில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இதுவே சிறந்தது என்று நான் நம்புகிறேன். இப்போதும் நியூசிலாந்துக்காக விளையாடுவது என்னுடைய உச்சமாக இருக்கிறது. நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறுவதிலும் நான் ஆர்வத்துடன் இருக்கிறேன். அதனால் அடுத்ததாக வரும் டெஸ்ட் தொடர்களில் நான் விளையாட உள்ளேன். பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் தேர்வானால் விளையாட தயாராக உள்ளேன்" என்று கூறினார்.
மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று நடந்த முதல் சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், செக் நாட்டு வீரர் ஜிரி லெஹெகாவை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் மெத்வதேவ் 6-7 (2-7), 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், நேற்று நடந்த முதல் சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், பிரான்சின் வர்வரா கிரசிவாவுடன் மோதினார். இந்தப் போட்டியில் ஸ்வியாடெக் 6-0, 6-7 (8-10), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வார ராசிபலன்
14 Feb 2026


