முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024-பாராலிம்பிக்கில் பதக்கம்: தமிழக வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2024      விளையாட்டு
Udayanidhi-1 2023-10-15

Source: provided

சென்னை : பாரா ஒலிம்பிக்சில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

4,400 பேர் பங்கேற்பு...

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவில் தமிழக வீராங்கனைகளான துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கமும், மனிஷா ராமதாஸ் வெண்கல பதக்கமும், எஸ்.எச்6 பிரிவில் நித்யஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கமும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தொலைபேசியில்...

இந்த நிலையில் பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்யா ஸ்ரீ சிவன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "எங்கள் பாரா-பேட்மிண்டன் சாம்பியன்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024ல் நம் நாட்டிற்காக பதக்கங்களை வென்றதற்காக தமிழ்நாட்டிலிருந்து துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்யாஸ்ரீசிவன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன்.

வெற்றிபெற... 

நமது மாநில அரசு வழங்கும் அசைக்க முடியாத ஆதரவிற்கு எங்கள் துணை விளையாட்டு வீரர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர். இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் மேலும் பாராட்டுகளை பெற்றுத் தருவதில் அவர்கள் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன். அவர்களின் சிறப்பான பணிகளில் தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும் என்று உறுதியளித்தோம்" என்று அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து