Idhayam Matrimony

அதிக வருமான வரி செலுத்தியவர்கள்: 2-வது இடத்தில் நடிகர் விஜய்

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2024      சினிமா
Vijay 2023-12-30

புதுடில்லி, 2024ம் ஆண்டு அதிக வருமான வரி செலுத்தியவர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடத்திலும், நடிகர் விஜய் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த நிதியாண்டில் பிரபலங்கள் செலுத்திய வருமான வரி குறித்து பார்ச்சூன் இந்தியா' ஆய்வு செய்து பட்டியல் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் பாலிவுட் நடிகர்கள் அதிகம் பேர் உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த நடிகர் விஜய் மட்டுமே 2வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் ரூ.92 கோடி வரி செலுத்தி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடத்தில் உள்ளார். 2வதாக நடிகர் விஜய் ரூ. 80 கோடியும், 3வதாக சல்மான் கான் ரூ.75 கோடியும், 4வதாக அமிதாப்பச்சன் ரூ. 71 கோடியும், 5வதாக கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி 66 கோடியும், 6வதாக அஜய் தேவ்கன் ரூ.42 கோடியும், 7 வதாக கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி ரூ.38 கோடியும், 8 வதாக ரன்பீர் கபூர் ரூ.36 கோடியும், 9வதாக ஹிர்திக் ரோஷன் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தலா ரூ.28 கோடியும், 10 வதாக கபில் சர்மா ரூ.26 கோடியும் வரி செலுத்தி உள்ளனர்.

மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி ரூ.23 கோடி, நடிகை கரீனா கபூர் ரூ.20 கோடி, நடிகர் ஷாகீத் கபூர் ரூ.14 கோடி, கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா ரூ.13 கோடி, நடிகை கியாரா அத்வானி ரூ.12 கோடி, மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தலா ரூ.14 கோடி, நடிகர் பங்கஜ் திரிபாதி மற்றும் நடிகை காத்ரீனா கைப் தலா ரூ.11 கோடி வரி செலுத்தி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 9 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 9 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 11 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 11 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 9 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து