முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சி நிறைவு பெற்ற 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உதவி மற்றும் சார் ஆட்சியர்களாக நியமனம்: தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவு

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      தமிழகம்
CHIEF SECRETARY

சென்னை, ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறைவு பெற்ற 10 சிவில் சர்வீஸ் அதிகாரிகளை உதவி மற்றும் சார் ஆட்சியர்களாக நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம்  உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பயிற்சி நிறைவு பெற்ற 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 5 பேரை உதவி மாவட்ட ஆட்சியர்களாகவும், 5 பேரை சார் ஆட்சியர்களாகவும் நியமனம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, ஸ்வாதிஸ்ரீ, குளித்தலை உதவி ஆட்சியராகவும், ஆயுஷ் வெங்கட் வத்ஸ் தேவகோட்டை உதவி ஆட்சியராகவும், சிவானந்தம் ஈரோடு மாவட்டம் கோபி சார் ஆட்சியராகவும், ஆனந்த் குமார் சிங், திருக்கோவிலூர் உதவி ஆட்சியராகவும், ஆஷிக் அலி ஸ்ரீபெரும்புதூர் உதவி ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதே போல, ஹ்ருத்யா விஜயன் கும்பகோணம் சார் ஆட்சியராகவும், சங்கீதா குன்னூர் சார் ஆட்சியராகவும், கிஷன் குமார் பழனி சார் ஆட்சியராகவும், வினய் குமார் மீனா பத்மநாபபுரம் உதவி ஆட்சியராகவும், ரஜத் பீடோன் பெரியகுளம் சார் ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து