முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் ராகுல் காந்திக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      உலகம்
Rahul 2024-09-08

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்திக்கு டெக்ஸாஸ் மாகாணத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் அயலக காங்கிரஸ் உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர்  டல்லாசில் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். 

பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களும் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளனர். அடுத்த நாள் வாஷிங்டனில் சிந்தனையாளர்கள், தேசிய பத்திரிகையாளர்கள் மன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  அமெரிக்கா சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தன்னுடைய டுவிட்டர் பதிவில் ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது:-

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் டல்லாசில் உள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் அயலக காங்கிரஸ் உறுப்பினர்கள் எனக்கு அளித்த வரவேற்புக்கு நான் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கும் பிணைப்பை ஏற்படுத்தும் அர்த்தமுள்ள விவாதங்கள் மற்றும் உரையாடல்களில் ஈடுபட ஆவலுடன் இருக்கிறேன் என்று  குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து