முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சைபர் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பின் அங்கமாகி விட்டது: மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      இந்தியா
amit-shah 1

புது டெல்லி, சைபர் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பின் முக்கிய அங்கமாகி விட்டது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் முதல் அமைப்பு தின விழா டெல்லியில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். இதில் சைபர் குற்றங்களை தடுப்பதற்கான முக்கிய முன்முயற்சிகளை அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து சைபர் குற்றங்கள் குறைப்பு மையத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர் அவர் பேசியதாவது, தற்போதுள்ள நிலையில் சைபர் பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமற்றது. தொழில் நுட்பம் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் தொழில்நுட்பத்தின் காரணமாக பல அச்சுறுத்தல்களைக் காண முடிகிறது. சைபர் குற்றத்துக்கு எல்லை இல்லை. 

எனவே அனைவரும் ஒன்று சேர வேண்டும். சைபர் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பின் முக்கிய அங்கமாகி விட்டது. சைபர் குற்றங்களை எதிர்கொள்ள அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் சைபர் கமாண்டோக்களுக்கு பயிற்சி அளித்து தயார்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து