முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யை அடுத்து ராஜஸ்தானில்.... சிமெண்ட் துண்களை வைத்து சரக்கு ரெயிலை கவிழ்க்க சதி

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      இந்தியா
UP 2024-09-10

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் ரயில் தண்டவாளத்தில் தலா 70 கிலோ சிமெண்ட் துண்டுகளை வைத்து சரக்கு ரயிலை தடம்புரள வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிமெண்ட் துண்டுகள் மீது சரக்கு ரயில் மோதி நிலையிலும், எந்தவித சேதமுமின்றி ரயில் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்துள்ளது. ரயில்வே ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே சட்டம் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தலை தடுக்கும் சட்டம் ஆகியவற்றின் கீழ் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் ஃபுலேரா-அகமதாபாத் வழித்தடத்தில் சாரத்னா மற்றும் பங்காத் ரயில் நிலையங்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. முதலில் ரயில்வே தண்டாளத்தில் சிமெண்ட் துண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, சிமெண்ட் துண்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இந்த ரயில் கவிழ்ப்பு சதி தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல, உத்தர பிரதேச மாநிலத்தில் தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் நிரம்பிய பாட்டில் ஆகியவை வைக்கப்பட்டு, காளிந்தி விரைவு ரயிலைக் கவிழ்ப்பதற்கான சதி முயற்சி நடைபெற்ற நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து