Idhayam Matrimony

டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 4-வது இடம்பிடித்தார் ஜுக்கர்பெர்க் : முதலிடத்தில் எலான்மஸ்க்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      உலகம்
Mark-Zuckerberg 2024-03-30

Source: provided

நியூயார்க் : உலகளவில் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

புளும்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 200 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களைக் கொண்ட பணக்காரர்கள் பட்டியலுக்குள் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் நுழைந்துள்ளார். இதன் மூலம், உலகின் 4-வது மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார்.

மொத்தம் 201 மில்லியன் அமெரிக்கா டாலராக அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும், ஓரகல் இணை நிறுவனர் லேரி எல்லிசன் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ.க்களான பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மரை விட அதிகளவு வருவாய் ஈட்டியுள்ளார். அதாவது, 73.4 பில்லியன் சொத்துக்களை பெற்றுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 60 சதவீத சொத்துக்கள் உயர்ந்துள்ளது. அவரது மெட்டா நிறுவன பங்குகள் வரலாறு காணாத வகையில் 560 அமெரிக்க டாலர் வரை எட்டியது. 

அண்மையில் நடந்த மெட்டா கனெக்ட் நிகழ்ச்சியில் பேசிய ஜூக்கர்பெர்க், ஏ.ஐ. தான் தங்கள் நிறுவனத்தின் எதிர்கால திட்டம் என்றும், இது அதிக பயனாளர்கள் பயன்படுத்தும் மென்பொருளாக மெட்டா ஏ.ஐ., மாறும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க் 272 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 211 மில்லியன் அமெரிக்கா டாலர் சொத்துக்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். 

எல்.வி.எம்.எச்., தலைவர் பெர்னார்டு அர்னால்ட் 207 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து