முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் விளையாட சுதந்திரம் கொடுத்தனர்: ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      விளையாட்டு
Jaiswal 2024-02-02

Source: provided

கான்பூர் : வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விரும்படி விளையாட எனக்கு சுதந்திரம் கொடுத்தனர் என்று ஆட்டநாயகன் விருது வென்ற ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

ஆட்டநாயகன் விருது... 

வங்காளதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது. வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது வென்றார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, என்னுடைய அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். சென்னையிலும் இங்கேயும் சூழ்நிலை வித்தியாசமாக இருந்தது. அதில் என்னுடைய அணிக்காக சிறந்தவற்றை செய்ய என்னுடைய சிறந்த செயல்பாட்டை கொடுக்க முயற்சித்தேன். ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம்.

விரும்பும் வழியில்... 

ரோகித் மற்றும் கவுதம் சார் நான் விரும்பும் வழியில் விளையாடுமாறு சொன்னார்கள். நாம் சுதந்திரமாக விளையாடி கொஞ்சம் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று நாங்கள் பேசினோம். ஏனெனில் போட்டியை வெல்ல விரும்பிய நாங்கள் அதற்காக சென்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து