முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் கல்வீச்சு சம்பவத்தில் 21 போலீசார் காயம்

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024      இந்தியா
Maharashtra

மும்பை, மகாராஷ்டிரத்தில் காவல்துறையினர் மீது சிறுபான்மையினர் நடத்திய தாக்குதலில் 21 போலீசார் காயமடைந்தனர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்து ஆன்மிக குருவான யதி நரசிங்கானந்த் மஹாராஜ் என்பவர், நபிகள் நாயகம் குறித்த அவதூறு கருத்துகளை தெரிவித்ததற்கு எதிர்த்து பலரும் கருத்துகள் தெரிவித்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காவல்துறையினருக்கு கோரிக்கையும் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் நரசிங்கானந்த் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்க சென்ற சிறுபான்மையினர், வெள்ளிக்கிழமை (அக். 4) இரவு 8.15 மணியளவில் மகாராஷ்டிரத்தில் உள்ள அமராவதி நகரில் நாக்புரி கேட் காவல் நிலையத்திற்கு சென்றனர்.

அவர்களுடன் சமாதானப் பேச்சில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது, சிலர் கற்களைக் கொண்டு வீசி, தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, சிறுபான்மையினரைக் கலைப்பதற்காக காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் மீது கற்களை வீசி நடத்திய தாக்குதலில், 21 காவல் அதிகாரிகள் காயமடைந்தனர்; 10 காவல் நிலைய வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. இறுதியாக, தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் கலைத்தனர். மேலும், அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, 1200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், நாக்புரி கேட் பகுதியில் பி.என்.எஸ்.எஸ். பிரிவு 163 கீழ் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து