Idhayam Matrimony

குரூப்-4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை 15,000 ஆக உயர்த்த வேண்டும்: ஓ.பி.எஸ்.

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2024      தமிழகம்
OPS 2022 12 29

Source: provided

சென்னை : குரூப்-4 காலிப்பணியிடங்களை உயர்த்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப்-1, குரூப்-2, குரூப்-2A, குரூப்-3, குரூப்-4 என பல நிலைகளில் தேர்வுகள் நடத்தப்பட்டாலும், குரூப்-4ன்கீழ் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபின், முதன் முறையாக 2022-ம் ஆண்டு குரூப்-4ன்கீழ் வரும் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தியது. இதன்மூலம், சீருடைப் பணியாளர்கள் (வனத்துறை) இல்லாமல் 10,139 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 2023-ம் ஆண்டு குரூப்-4 போட்டித் தேர்வு நடத்தப்படவில்லை. 2024-ம் ஆண்டு, குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. 

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் குரூப்-4ன்கீழ் கிட்டத்தட்ட 10,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிடும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 2024-ம் ஆண்டு முதலில் வெறும் 6,244 பணியிடங்களுக்கான அறிவிப்பை மட்டுமே வெளியிட்டது. 

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை வெகு குறைவாக அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, கட் ஆப்  மதிப்பெண் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் ஏழை எளிய கிராமப்புற இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக் கனியாகி விடும் என்றும், 2024-ஆம் ஆண்டு தொகுதி-4 போட்டித் தேர்வினை எழுதியோர் தெரிவிக்கின்றனர். 

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் 34 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே குரூப்-4ன்கீழ் வரும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15,000 வரை அதிகரிக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து, அரசுத் துறைகளில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து