முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திக ஹதுருசிங்க சஸ்பெண்ட்

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2024      விளையாட்டு
Bangladesh 2024-09-02

Source: provided

வங்காளதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இந்த இரு தொடர்களையும் (2-0, 3-0) இந்திய அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னர் இந்திய அணியை வீழ்த்துவோம் என வங்காளதேச அணியினர் கூறி வந்தனர். ஆனால், அதற்கு மாறாக ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் வங்காளதேச அணியினர் சொந்த நாட்டுக்கு திரும்பினர்.

இந்நிலையில், வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த சந்திக ஹதுருசிங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கு எதிரான மோசமான செயல்பாடு காரணமாகவும், கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது ஒரு வீரரை அறைந்த காரணத்திற்காகவும் சந்திக ஹதுருசிங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த முன்னாள் வீரர் பில் சிம்மன்ஸ் வங்காளதேச அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளதாகவும், அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் எனவும் கூறப்படுகிறது.

__________________________________________________________________________________

நியூசி., வேகப்பந்து வீச்சாளர் விலகல்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் பெங்களூரு, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும், நியூசிலாந்து அணி டாம் லதாம் தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் பென் சியர்ஸ் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பென் சியர்ஸ் முழங்கால் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளதாகவும், அவருக்கு பதிலாக ஜேக்கப் டக்ப்பி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து