முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம்-மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்பட தமிழ்நாட்டிற்கு 5 புதிய ரயில் சேவைகள் இன்று தொடக்கம் : பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2026      தமிழகம்
Modi 2024-09-15

திருச்சி, நெல்லை-மங்களூரு எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்- மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கான 5 புதிய ரெயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். 

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இதற்காக திருச்சி பஞ்சப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை மற்றும் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிர்சார பொதுக் கூட்டத்திற்கு முன்பாக அதே பகுதியில் மத்திய அரசு விழா நடக்கிறது.

மத்திய அரசு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கான 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைக்க உள்ளார். அந்த வகையில் இன்று நெல்லை- மங்களூரு எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்- மங்களூரு எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை- காரைக்குடி, நாகர்கோவில்- சாரளப்பள்ளி அம்ரித் பாரத், கோவை- தன்பாத் அம்ரித் பாரத் ரெயில் ஆகிய ரெயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 

டிரோன்கள் பறக்க தடை

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளாோர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது; “பாரத பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வருகை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி இன்று (11.03.2026) முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே இன்று (11.03.2026) முழுவதும் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து