முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரான் மீது 20 மடங்கு கூடுதலாக தாக்குதல் நடத்தப்படும்: ட்ரம்ப்

செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2026      உலகம்
Trump 2024-11-06

வாஷிங்டன், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் போக்குவரத்தை முடக்க நினைத்தால் இதுவரை தாக்கப்பட்டதைவிட ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போர் காரணமாக பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்திருந்தது. மேலும், தடையை மீறி எண்ணெய் கொண்டு செல்ல நினைத்தால் கப்பலை தாக்கி அழிப்போம் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனிடையே, பாரசீக வளைகுடா வழியாகப் பயணிக்கும் அனைத்துக் கப்பல்களுக்கும், குறிப்பாக எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களுக்கு கடற்படைப் பாதுகாப்பு மற்றும் காப்பீடு வழங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மட்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், சமூக ஊடகப் பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: ”ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் எண்ணெய் போக்குவரத்தை முடக்க நினைத்தால், ஈரான் மீது இதுவரை தாக்கப்பட்டதைவிட 20 மடங்கு கடுமையாக தாக்குதல் நடத்துவோம். மீண்டும் ஒரு நாடாக ஈரான் கட்டியெழுப்ப முடியாத நிலையை உருவாக்கும் வகையில், எளிதில் அழிக்கக்கூடிய இலக்குகளை தகர்ப்போம். மரணமும், நெருப்பும், ஆக்ரோஷமும் ஈரான் மீது பொழியும். ஆனால், இதெல்லாம் நடக்கக் கூடாது என்று நம்புகிறேன், பிரார்த்தனை செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து