முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கை, திருவாரூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது கொடூர தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      தமிழகம்
eps

சென்னை, சிவகங்கை, திருவாரூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் கொடூர சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.,  சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தெற்கு ஒன்றியம், மாத்தூர் ஊராட்சி, அ.தி.மு.க. நாட்டாக்குடி கிளைச் செயலாளர் ஆர். கணேசன் நேற்று (4.11.2024) காலை 5 மணியளவில் வழக்கம்போல் தனது பெட்டிக் கடையை திறக்கச் சென்றபோது, அவரை மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். நாட்டாக்குடி கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கோவில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்ட நிலையில், காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படுகொலையை தடுத்திருக்கலாம்.

மற்றொரு நிகழ்வில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர 7-வது வார்டு கழகச் செயலாளர் பி. ரமேஷ் என்பவரை, திமுக நகர மன்ற வார்டு உறுப்பினரின் கணவர் கோவி. சக்தி மற்றும் இரண்டு நபர்கள் நேற்று முன்தினம் இரவு (3.11.2024) 9 மணியளவில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஆயுதங்கள் கொண்டு பலமாக தாக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த ரமேஷ் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகம் முழுவதும் கடந்த 41 மாத காலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம், சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை அனுபவிக்கும் பாலியல் தொல்லைகள், போதைப்பொருள் புழக்கம் போன்ற கொடூரச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன என்று செய்திகள் வருவது வெட்கக்கேடானது.

சிவகங்கை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், எங்களது கழக நிர்வாகிகள் மீது முன்பகையுடன் அவர்கள் தாக்கப்படுவதற்கான அபாயம் உள்ளது என்ற நிலையில் எதிரிகளை முன்னெச்சரிக்கையாக கைது மற்றும் எச்சரிக்கை செய்யாத நிலையில், எங்களது கழக நிர்வாகிகள் மீது கொலை மற்றும் கொலை வெறித் தாக்குதல்கள் நடந்தேறியுள்ளன. காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இனியாவது விழித்துக்கொண்டு, தமிழகம் முழுவதும் இதுபோன்ற முன்விரோத தாக்குதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து