முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமன் செய்த ஆஸ்திரேலியா

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      விளையாட்டு
Australia 2023-12-17

Source: provided

முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 33.3 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 204 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் இங்லிஸ் 49 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற அணிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸை, ஆஸ்திரேலிய அணி சமன் செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் (71 வெற்றிகள், 137 ஆட்டம்) பெற்று முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா ( 71 வெற்றிகள், 109 ஆட்டம்) வெஸ்ட் இண்டீஸை சமன் செய்துள்ளது.

______________________________________________________________________________________________

மிட்செல் ஸ்டார்க் சாதனை

முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மெல்போர்னில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இந்த ஆட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ-யின் மாபெரும் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். அதாவது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக ஆஸ்திரேலியாவில் வேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பிரட் லீ-யின் சாதனையை ஸ்டார்க் முறியடித்துள்ளார். பிரட் லீலீ 55 இன்னிங்சில் 100 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் ஸ்டார்க் 54 இன்னிங்சில் 100 விக்கெட்டுகளை கடந்துள்ளார்.

______________________________________________________________________________________________

சாஹா ஓய்வு அறிவிப்பு

40 வயதாகும் சாஹா இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடந்த 2021ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தார். அதன் பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் அவர் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக இந்திய வீரர் ரித்திமான் சாஹா ஞாயிற்றுகிழமை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நேசத்திற்குரிய கிரிக்கெட் பயணத்தில் இந்த ரஞ்சி தொடரே எனது கடைசி தொடராக இருக்கும். நான் ஓய்வு பெறுவதற்கு முன் ஒரு முறை கடைசியாக பெங்கால் அணிக்காக விளையாட இருக்கிறேன். இந்த சீசனை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே எதிர்வரும் ஐபிஎஸ் மெகா ஏலத்தில் பங்கேற்க சாஹா பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

______________________________________________________________________________________________

ராஜஸ்தான் அணிக்கு நன்றி 

ஐ.பி.எல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை கடந்த 31ம் தேதி வெளியிட்டன. இதில் ராஜஸ்தான் அணி 6 வீரர்களை தக்க வைத்தது. அந்த வகையில் சஞ்சு சாம்சன் (ரூ. 18 கோடி), ஜெய்ஸ்வால் (ரூ. 18 கோடி), ரியான் பராக் (ரூ. 14 கோடி), துருவ் ஜுரேல் (ரூ. 14 கோடி), ஹெட்மையர் (ரூ. 11 கோடி), சந்தீப் சர்மா (ரூ. 4 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் அணி தன்னை விடுவித்தது குறித்து இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் உருக்கமாக தனது கருத்தை கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, ஒரு வேளை இதுவே கடைசியாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு நன்றி. எனது கிரிக்கெட் பயணத்தின் சிறந்த தருணம் 2018ல் தான் தொடங்கியது. கடந்த 6 ஆண்டுகளில் இந்த பிங்க் ஜெர்ஸியில்தான் நான் நிறைய அற்புதங்களை நிகழ்த்தியுள்ளேன். என்னையும் என் குடும்பத்தையும் அணைத்து அரவணைத்து கொண்டதற்கு நன்றி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து