முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலையாள நடிகர்கள் சங்க தலைவர் பொறுப்பை ஏற்க மோகன்லால் மறுப்பு

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      சினிமா
Mohanlal 2024 08 18

திருவனந்தபுரம், மலையாள நடிகர்கள் சங்க தலைவர் பொறுப்பை மீண்டும் ஏற்க நடிகர் மோகன்லால் மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. 

மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விசாரித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதற்குப் பின் முன்னணி நடிகர்கள், டைரக்டர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் பலர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் குவிந்தன. மலையாள நடிகர்கள் சங்க பொதுச் செயலாளராக இருந்த பிரபல நடிகர் சித்திக் மீதும் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து தன்னுடைய பதவியை அவர் ராஜினாமா செய்தார். தொடர்ந்து முகேஷ், ஜெயசூர்யா இடைவேளை பாபு, மணியன் பிள்ளை ராஜு என முன்னணி நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டதை தொடர்ந்து மலையாள நடிகர்கள் சங்கம் அதிரடியாக கலைக்கப்பட்டது. தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

தற்போது மலையாள நடிகர்கள் சங்கத்தில் தற்காலிக கமிட்டி செயல்பட்டு வருகிறது. அடுத்த வருடம் ஜூனில் பொதுக்குழு கூடி தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நடிகர் மோகன்லால் மீண்டும் தலைவராக வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தான் தலைவர் பதவியை மீண்டும் ஏற்கப் போவதில்லை என்று மோகன்லால் மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து