முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச மாணவர்களுக்கான விரைவு விசா திட்டத்தை நிறுத்தியது கனடா

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      உலகம்
Jastin Ruto 2023-09-19

Source: provided

ஒட்டாவா : சர்வதேச மாணவர்களுக்கான விரைவு விசா திட்டத்தை கனடா நிறுத்தி உள்ளது 

சர்வதேச மாணவர்களுக்கு விரைவில் விசா வழங்கும் நடைமுறையை கனடா கடந்த 2018-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதன் மூலம் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் எளிதாக விசா பெற்று கனடாவில் படிக்கச் சென்றனர். 

கடந்த ஆண்டில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கனடா விசா வழங்கி இருந்தது. இந்திய மாணவர்களுக்கு 2 மாதங்களுக்குள் விசா கிடைத்தது. தற்போதை நிலவரப்படி 4 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கனடாவில் கல்வி பயில்கின்றனர்.

இந்த நிலையில் படிப்பதற்காகவும், வேலைக்காகவும் வெளிநாட்டினர் அதிகம் கனடா வருவதால் அங்கு குடியிருக்க வீடு கிடைப்பது சிரமமாகி விட்டது. இதர வசதிகள் செய்து தருவதிலும் சிக்கல் ஏற்பட்டது. மாணவர்களின் வாழ்க்கை துணைகளுக்கு வேலை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதன் எதிரொலியாக சர்வதேச மாணவர்களின் வருகையை கட்டுப்படுத்த கனடா அரசு முடிவு செய்தது. அதன்படி இந்த ஆண்டு கனடா வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 35 சதவீதம் குறைக்கப்பட்டது. 

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கி வந்த விரைவு விசா நடைமுறையை கனடா அரசு நேற்று முன்தினம் நிறுத்தி உள்ளது. இதன்படி அடுத்த ஆண்டில் முதுநிலை பட்டப்படிப்பு உள்பட அனைத்து படிப்புகளிலும் சேர வெளிநாட்டு மாணவர்கள் 4 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு மட்டுமே விசா வழங்க உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழி தகுதி தேர்வு நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. சர்வதேச மாணவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் வேலை பார்ப்பதற்கு வழங்கப்படும் அனுமதியும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச மாணவர்கள் கனடாவில் படிக்க விசா பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.

மேலும் மொழித் தேர்வு, முதலீட்டு தொகை உள்பட தங்களின் தகுதிகளையும் உயர்த்திக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கான விரைவு விசாவை கனடா நிறுத்தியுள்ளது, அங்கு படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.கனடாவில் நிலைமை சரியில்லாததால், அங்கு படிக்க இந்திய மாணவர்கள் செல்ல வேண்டாம் என மத்திய அரசும் சமீபத்தில் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து