முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை வந்த பக்தர் உயிரிழப்பு: 5 லட்சம் ரூபாய் நிதி வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2024      ஆன்மிகம்
Karala 2024-05-08

திருவனந்தபுரம், உயிரிழந்த பக்தர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நடப்பு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15-ந் தேதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் தினமும் 18 மணி நேரம் தரிசனத்துக்காக நடை திறக்கப்படுகிறது. 

இந்தநிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன் ஆந்திர மாநிலம் விஜயபுரத்தில் இருந்து வந்த முருகாச்சாரி (வயது 49) என்ற பக்தர் பம்பையில் இருந்து சன்னிதானம் நோக்கி மலையேறி சென்று கொண்டிருந்தார். நீலிமலை என்ற இடத்தை சென்றடைந்த போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. பிறகு அவர் அங்குள்ள இதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகாச்சாரி பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சொந்த செலவில் அவரது சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தால் அவர்களது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் காப்பீடு உதவி வழங்கப்படும் என்றும் ஏற்கனவே திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்திருந்தது. அதன்படி முருகாச்சாரி குடும்பத்திற்கு உடனடியாக ரூ.5 லட்சம் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை திருவிதாங்கூர் தேவஸ்தானம் எடுத்து வருகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து