முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிப்ரவரி மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2024      ஆன்மிகம்
Tirupati 2023-09-29

Source: provided

திருமலை : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிப்ரவரி மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படுகிறது. 

இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 

 திருப்பதி தேவஸ்தானம் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்களை ஆன்லைனில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடுகிறது. பிப்ரவரி மாதத்துக்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.

முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிப்ரவரி மாதம் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்ய இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு இன்று  மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது. 

பிப்ரவரி மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு (ரூ. 300 தரிசன டிக்கெட்) வரும் 25-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது. 

திருமலை மற்றும் திருப்பதியில் பிப்ரவரி மாதத்துக்கான அறை ஒதுக்கீடு வரும் 25-ம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு பக்தர்கள் https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து