முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 2025-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2024      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : 2025-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தினங்கள் மற்றும் மதரீதியான பண்டிகைகள் காரணமாக, அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்த பொது விடுமுறை பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும். அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 25-ம் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்கள் ஆகும். 2025-ம் ஆண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளும் பொது விடுமுறை நாட்களாகும்.

ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப் பூசம், குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக ஜனவரி மாதம் 5 நாட்கள் பொது விடுமுறையாகும். ஏப்ரல் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் தலா 4 நாட்கள் பொது விடுமுறை வருகிறது. ஏப்ரல் 1-ந்தேதி (வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு) வணிகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் பொது விடுமுறையாகும். குடியரசு தினம், தெலுங்கு வருடப்பிறப்பு, மொகரம் பண்டிகை ஆகிய பொது விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து