முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் அரசுக்கு ரூ. 1,100 கோடி இழப்பு: சென்னை ஐகோர்ட் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

சென்னை, அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் அந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக 10 மாவட்டங்களின் கலெக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது அரசு தரப்பில் இருந்து யாரும் ஆஜராகாதது குறித்து நீதிபதிகள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். மேலும், இதற்கு உதாரணமாக கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் மட்டும் இதுவரை அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகள் காரணமாக அரசுக்கு ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக தமிழக பொதுத்துறை செயலாளர், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆகியோர் நேற்று ஆஜரான நிலையில், வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் ஆஜராகாததற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மன்னிப்பு கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக பொதுத்துறை செயலாளர் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தனர். மேலும் அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து