முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி விட்டது ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 30 நவம்பர் 2024      உலகம்
Israel 2024-11-30

Source: provided

 

பெய்ரூட்: போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி விட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா உள்ளது. லெபனானில் இயங்கி வரும் இந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஈரான் ஆதரவாக உள்ளது.

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்து இஸேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் லெபனானில் 3,800-க்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். 12 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்தனர். இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய இருநாடுகளும் எடுத்த முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த  27-ம் தேதி அமலுக்கு வந்தது.

இந்த நிலையில்,  லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த தயாராக இருந்ததாகவும் இதனால், தாக்குதல்  நடத்தியதாகவும்  இஸ்ரேல் கூறியது.

ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்த ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் வேண்டுமென்றே போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.   

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து