முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நமீபியாவின் ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் பெண்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      உலகம்
Nameebiya 2024-12-04

Source: provided

விண்ட்ஹோக்: நமீபியாவின் ஜனாதிபதியாக முதல் முறையாக ஒரு பெண் பதவியேற்க உள்ளார்.

நமீபியா நாட்டில் கடந்த மாதம் 27-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தென்மேற்கு ஆப்பிரிக்காவின் மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட துணை ஜனாதிபதி நெடும்போ நந்தி தைத்வா 57.3 சதவீத வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் நமீபியாவின் ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதே போல் ஆப்பிரிக்க கண்டத்தின் 2-வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். 

அதே சமயம், தேர்தல் முடிவுகளுக்கு அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முன்னதாக தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டில் உள்ள வேலையின்மை விகிதத்தை குறைக்கவும், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்களை மேம்படுத்தவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளதாக நெடும்போ நந்தி தைத்வா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து