முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் விரைவில் முடிவுக்கு வரும் அதிபர் ட்ரம்ப் அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை சரிவு

செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2026      உலகம்
Oil

நியூயார்க், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்தது. 

அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாக நடக்கிறது. அங்கு போக்குவரத்து முடங்கியதால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 119.50 டாலராக அதிகரித்து பின்னர் 112.98 டாலருக்கு விற்றது.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும். கச்சா எண்ணெய் விலைகளைக் குறைப்பதற்காக எண்ணெய் சார்ந்த குறிப்பிட்ட சில தடைகளை நாங்கள் தளர்த்தி வருகிறோம். நிலைமை சீரடையும் வரை அந்தத் தடைகளை நாங்கள் நீக்கி வைப்போம். தேவைப்பட்டால் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்களை அமெரிக்கக் கடற்படையும் அதன் கூட்டாளி நாடுகளும் பாதுகாப்பாக வழிநடத்திச் செல்லும் என்று தெரிவித்தார்.

ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்தது. சர்வதேச சந்தையில் நேற்று காலை பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 90 அமெரிக்க டாலராக சரிந்தது. அதேபோல் மற்ற ரக கச்சா எண்ணெய் விலைகளும் கடும் சரிவை சந்தித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து