முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 70 ஆயிரத்துக்கு போலி மருத்துவ பட்டப்படிப்பு சான்றிதழை விற்ற கும்பல் குஜராத்தில் சிக்கியது

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      இந்தியா
Jail

Source: provided

சூரத்: குஜராத்தில் ரூ. 70 ஆயிரத்துக்கு போலி மருத்துவ பட்டப்படிப்பு சான்றிதழை விற்ற கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 சூரத்தில் போலி டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக சென்ற புகாரின் பேரில் 3 கிளீனிக்குகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவ வாரியம் (பி.இ.எச்.எம்.) மருத்துவ படிப்புக்கான பட்டப்படிப்பு சான்றிதழ் மூலம் 3 பேர் மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

குஜராத்தில் இது போன்ற ஒரு படிப்பு இல்லாத நிலையில் இந்த 3 பேரும் போலியாக டாக்டர் பட்டப்படிப்புக்கான சான்றிதழை ரூ. 70 ஆயிரம் கொடுத்து வாங்கியதும் தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் குஜராத்தை சேர்ந்த டாக்டர் ரமேஷ் என்பவர் இந்த சம்பவத்தில் முக்கியமானவராக செயல்பட்டுள்ளார். 

அவர் 5 பேரை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் படிப்பை முடித்து, எலக்ட்ரோ ஹோமியோபதி மருந்துகளை பரிந்துரைப்பது எப்படி? என பயிற்சி அளித்ததும் தெரியவந்தது. அவருடன் மேலும் ஒரு டாக்டரும் சேர்ந்து போலி மருத்துவ பட்டப்படிப்பு சான்றிதழ்களை விற்பனை செய்து வந்துள்ளார்.  

எலக்ட்ரோ ஹோமியோபதி படிப்புக்கு எந்தவித கட்டுப்பாடு மற்றும் விதிகள் இல்லை என்பதை அறிந்து கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தனியாக ஹோமியோபதி போர்டு ஒன்றை தொடங்கி அதன் மூலம் போலி சான்றிதழ்களை ரூ.70 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு விநியோகம் செய்து வந்துள்ளனர். 

இந்த கும்பல் பணத்தை பெற்றுக் கொண்டு 15 நாட்களில் மருத்துவ படிப்புக்கான சான்றிதழ்களை கொடுத்ததும் தெரியவந்தது. பிடிபட்டவர்களின் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்திய போது அங்கு நூற்றுக்கணக்கான பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த மோசடிக்காக அவர்கள் தனியாக ஒரு இணையதளமும் தொடங்கி உள்ளனர். அதில் பட்டப்படிப்பு சான்றிதழ் பெற 1200 பேர் வரை பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து தீவிர விசாரணை செய்த போலீசார் போலி டாக்டர்கள் 14 பேரை கைது செய்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து