முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான 4-வது டெஸ்ட்: முகமது ஷமி பங்கேற்பு?

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2024      விளையாட்டு
Mohammed-Shami 2024 07 24

Source: provided

பெங்களூரு : முகமது ஷமி தற்போது உள்ளூர் தொடர்களில் விளையாடி வரும் நிலையில் அவரின் உடல்நிலை தகுதி குறித்து பி.சி.சி.ஐ. தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஷமி இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றுப்பயணம்... 

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் அவரால் இடம் பெற முடியவில்லை.

காயத்தில் இருந்து... 

தற்போது கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டுள்ள முகமது ஷமி உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார். ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக விளையாடிய அவர் காயத்திலிருந்து கம்பேக் கொடுத்த முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இதனால் அவர் விரைவில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியினுடன் இணைவார் என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

உடற்தகுதி குறித்து... 

இதனால் பிசிசிஐ, முகமது ஷமியின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும் பிசிசிஐ மருத்துவக்குழு ராஜ்கோட்டிற்கு சென்று அங்கு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடி வரும் முகமது ஷமியின் உடற்தகுதியை கண்காணித்தது. இந்நிலையில் முகமது ஷமி உடனடியாக (3-வது போட்டிக்கு முன்) ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 4 மற்றும் 5-வது போட்டிகளில் இந்திய அணிக்கு தேர்வாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து