Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 லட்சம் ரன்கள்: இங்கிலாந்து புதிய சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      விளையாட்டு
England 2024-05-14

Source: provided

வெலிங்டன் : டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 லட்சம் ரன்களை எடுத்த முதல் அணியாக இங்கிலாந்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

சுற்றுப்பயணம்... 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி வெலிங்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 280 ரன்களும், நியூசிலாந்து 125 ரன்களும் அடித்தன.

582 ரன்கள் இலக்கு...

பின்னர் 155 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 427 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து வெற்றி பெற 582 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி வெறும் 259 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி மாபெரும் வரலாற்று சாதனையை படைத்துள்ளது. 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5 லட்சம் டெஸ்ட் ரன்களை கடந்த முதல் அணி என்ற மாபெரும் உலக சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. இங்கிலாந்து இதுவரை 1082 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து