முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது நாளாக வெள்ளப்பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2024      தமிழகம்
Kutralam 2024-12-14

Source: provided

தென்காசி: குற்றால அருவிகளில் 3-வது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு சுற்றுலா பயணிகள்  குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்காசி மாவட்டத்திற்கு கடந்த 3 தினங்களுக்கு முன் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி தென்காசி மாவட்டத்தில் கொட்டிய கனமழையால் குற்றாலம் அருவிகளில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் குற்றால அருவிகளில் 3-ஆவது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மிக மோசமாக இருக்கும் நிலையில், அங்கு யாரும் சென்றுவிடாமல் இருக்க போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

முன்னதாக கனமழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த காட்டாற்று வெள்ளம் போல நீர் அங்குள்ள பாலங்களுக்கு அருகே பாய்ந்து சென்றது. மேலும், அங்கு அருகே அமைக்கப்பட்டு இருந்த கடைகளிலும் கூட வெள்ள நீர் புகுந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து